தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

72ஆவது நாளாக விலையில் மாற்றமில்லை

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தீபாவளி அன்று குறைந்த நிலையில், 72 நாள்களாக விலையில் மாற்றம் இல்லை.

petrol diesel price in chennai  petrol diesel price  petrol price  diesel price  no changes in petrol diesel price in tamil nadu  பெட்ரோல் டீசல் விலை  பெட்ரோல் விலை  டீசல் விலை  தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை
பெட்ரோல் டீசல் விலை

By

Published : Jan 15, 2022, 8:18 AM IST

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.10 குறைந்த நிலையில், கடந்த 72 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது.

குறிப்பாக, டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் தேதி லிட்டர் பெட்ரோல் ரூ.106.66, டீசல் ரூ.102.59 விற்பனையானது.

இதையடுத்து தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய அரசு, 3ஆம் தேதி இரவு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டது. இதனால், 4ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் லிட்டருக்கு ரூ.10 குறைந்தது.

அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40, டீசல் ரூ.91.43 விற்பனையாயின. இன்று (ஜன.15) வரை 72 நாட்களாகியும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இது, வாகன ஓட்டிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குழந்தை, பெரியோருக்கான உலகளாவிய தடுப்பூசி கோவாக்சின்!

ABOUT THE AUTHOR

...view details