தமிழ்நாட்டில் கரோனோ தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இச்சூழலில் சென்னை மாநகரட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது உயிரையும் பணயம் வைத்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்களப் பணியாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என சுமார் 300 பேருக்கு திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் சென்னை திருமலா டி.எம்.டி கம்பிகள் குழுமம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு திருமலா டி.எம்.டி கம்பிகள் குழும மேலாளர் தினேஷ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.பி சொக்கலிங்கம், கே.பி இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருமலா டிஎம்டி கம்பிகள் குழுமம் சார்பாக மாநகராட்சி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - chennai latest news
திருவொற்றியூரில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என சுமார் 300 பேருக்கு உள்ள ராமகிருஷ்ணா நகரில் சென்னை திருமலா டி.எம்.டி கம்பிகள் குழுமம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
![திருமலா டிஎம்டி கம்பிகள் குழுமம் சார்பாக மாநகராட்சி ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் திருவொற்றியூரில் திருமலா டிஎம்டி கம்பிகள் குழுமம் சார்பாக நலத்திட்ட உதவிகள்.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12017752-thumbnail-3x2-asfmu.jpg)
திருவொற்றியூரில் திருமலா டிஎம்டி கம்பிகள் குழுமம் சார்பாக நலத்திட்ட உதவிகள்.
இது குறித்து, நிறுவன மேலாளர் தினேஷ் கூறுகையில் ’’கரோனா காலக்கட்டம் ஆரம்பித்த நாள் முதல் திருவொற்றியூர் பகுதிகள் மட்டுமல்லாது, சென்னை நகர் முழுவதும் திருமலா டி.எம்.டி கம்பிகள் குழுமம் சார்பாக மாநகராட்சி முன்கள பணியாளர்களாக பணியாற்றிவரும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது பெருமை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய அவுட்கேஸ்ட் கால்பந்து விளையாட்டு குழுவினர்