தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவே சிறந்தது... உணவு குறித்த மருத்துவரின் வழிகாட்டுதல்கள்!

ஊட்டச்சத்தான உணவுகள் மாயங்களால் உருவாகும் உணவல்ல. மக்கள் மேஜிக் உணவுகளைத் தேடிச் செல்வதைத் தவிர்த்துவிட்டு வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அதுவே, நோயில்லா வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என உணவு குறித்து உண்மைகளை உடைத்துப் பேசுகிறார், மருத்துவர் அருண்குமார்.

வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவே சிறந்தது... உணவு குறித்த மருத்துவரின் வழிகாட்டுதல்கள்!
வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவே சிறந்தது... உணவு குறித்த மருத்துவரின் வழிகாட்டுதல்கள்!

By

Published : Jun 7, 2020, 9:29 PM IST

சத்தான உணவுகள்தான் ஆரோக்கியமான வாழ்க்கையின் ஆணிவேர். இது எளியோருக்கு எட்டாத கனியாகவே இன்றளவும் இருக்கிறது. இந்த ஊடரங்கு காலத்தில் போதிய உணவு கிடைக்காமல், உயிரை விட்டவர்களின் கதைகளுக்குள் உணவு அரசியல் பின்னிக் கிடக்கிறது.

இந்த அரசியல், உணவு குறித்த விழிப்புணர்வு பொருட்டு உருவானதுதான் 'உலக உணவுப் பாதுகாப்பு தினம்'. கடந்த வருடம் உலகச் சுகாதார அமைப்பு இத்தினத்தை அறிமுகப்படுத்தியது. உயரத்தைக் கூட்டும் ஊட்டச்சத்து பானம், எலும்பைப் பலப்படுத்தும் புரோட்டின் பவுடர் என எதை எடுத்துக் கொண்டாலும், அதனை விளம்பரங்கள்தான் மக்களிடன் கொண்டுவந்து சேர்த்திருக்கும். உயரத்தை ஊட்டச்சத்து பானத்தால் கூட்டமுடியுமா என்றால், நிச்சயம் முடியாது என்பதுதான் பதில். உயரத்தைப் புறக்காரணிகளால் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. மரபுக் காரணிகளும், 12 வயதிலிருந்து 18 வயதுவரை கொடுக்கக்கூடிய புரதம் அதிகம் உள்ள உணவுகளுமே குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காரணம்.

உணவு வகைகள்

இந்தியாவில் ஊட்டச்சத்து

ஒரு ஆய்வின்படி, சராசரியாக 50-60 விழுக்காடுவரை மக்களுக்கு ரத்தசோகை இருப்பதாகவும், 70-90 விழுக்காடுவரை வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊட்டச்சத்தைப் பெறுவதில் உணவுகள் பற்றிய போதிய விழுப்புணர்வு இல்லாதது முக்கியக் காரணியாகக் கூறப்படுகிறது. உணவில் என்ன விழிப்புணர்வு இருக்கிறது, விளக்குகிறார் மருத்துவர் அருண்குமார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “தற்போது உணவுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் உலவுகின்றன. இதுபோன்ற தகவல்களில் நூற்றுக்கு 99 விழுக்காடு உண்மையில்லை. ’டயட்’ என்றால் கிரேக்க மொழியில் வாழ்வுமுறை என்று பொருள். பாரம்பரிய உணவுகள் எடுத்துக் கொண்டாலும் உடல் உழைப்பு அவசியம். வேலைகளே செய்யாமல் ஆரோக்கியத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். பண்டைய காலங்களில் சொற்ப உணவுக்கே அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. தற்போது அப்படியில்லை.

உணவு வகைகள்

மக்கள் உணவில் முன்னோர்கள் உண்ட உணவு உள்பட அனைத்திலும் ஏதோ மேஜிக்கை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதன்பின்னே ஓடிவருகின்றனர். அப்படி மேஜிக் உணவுகள் ஏதும் இல்லை. ஒரு பொருளை நாம் உண்ணுவதற்காக, அதன் இயல்பை மாற்றும்போதே அது பதப்படுத்தப்பட்ட உணவாக மாறிவிடும். முடிந்தவரை நாம் பதப்படுத்தப்படும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்” என்றார்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

  • ஒரு ஆப்பிளை அப்படியே பழமாகச் சாப்பிட வேண்டும், பழச்சாறாக மாற்றி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி உணவை சில செயல்முறைகளுக்கு உட்படுத்தும்போது அதன் இயல்பு மாறுகிறது
  • எல்லாவிதமான சக்கரையையும் நாம் தவிர்க்க வேண்டும்
  • மாவுச்சத்துகள் உள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும்
    மருத்துவர் அருண்குமாரின் சிறப்பு நேர்காணல்

நாம் எவ்வளவு உழைக்கிறோமோ அதற்கேற்றபடி சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். அதுவே, உடலை பேண உதவும். சத்தான உணவானாலும் அளவுக்கு மிஞ்சினால், நஞ்சுதான்!

இதையும் படிங்க: புற்றுநோயாளிகளின் சவால்கள்: மருத்துவ நிபுணர் சுப்பையா சண்முகம் நேர்காணல்...

ABOUT THE AUTHOR

...view details