தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் பிரபல பிரியாணி கடைக்கு சீல்! - biryani

சென்னையில் பிரபல உணவகமான 'யா முஹைய்யதீன் பிரியாணி' கடையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்த கடைக்கு அலுவலர்கள் சீல் வைத்தனர்.

சென்னையில் யா முஹைய்தீன் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல்!
சென்னையில் யா முஹைய்தீன் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல்!

By

Published : Jun 2, 2022, 10:51 PM IST

சென்னை,மாநகரின்பிரபல உணவகங்களில் ஒன்றான 'யா முஹைய்யதீன்' கடையில் இருந்து கெட்டுப்போன இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆய்வில் சமையலுக்கு பயன்படுத்திய கெட்டுப்போன மீன், சிக்கன், இறால் இறைச்சிகள் 50 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள பிரபல அசைவ உணவகமான 'யா முஹைய்யதீன்' உணவகத்தில் இன்று ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட 50 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பற்றி, கடைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், இரண்டாவது முறையாக கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்தினால் கடை நிரந்தரமாக மூடப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் யா முஹைய்தீன் பிரியாணி கடைக்கு அதிகாரிகள் சீல்!

உணவு உண்ண வந்த வாடிக்கையாளரின் புகாரைத் தொடர்ந்து யா முஹைய்யதீன் கடையில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், இந்தப் பெயரில் உள்ள அனைத்து கடைகளிலும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும் என ஆய்வில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதிஷ்குமார் கூறும்போது, "வடபழனி யா முஹைய்யதீன் கடையில் வழங்கப்படும் உணவு குறித்து வாடிக்கையாளரிடமிருந்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தது.

தற்போது கடையில் ஆய்வு செய்து காலாவதியான கோழிக்கறி, மீன், இறால், பிரியாணி கைப்பற்றப்பட்டது , 50 கிலோ வரை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்புவோம். ஆய்வு முடிவின்படி கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனையான உணவிற்கான பில்களை எங்களுக்கு இவர்கள் இன்னும் தரவில்லை. அதை கேட்டுள்ளோம். தற்காலிகமாக இந்த கடையின் சமையல் கூடம் மூடப்படுகிறது.

15 நாளுக்குள் கடையின் குளிர்சாதனம் உள்ளிட்ட உபகரணங்களை சரி செய்து, பாதுகாப்பான இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்துகிறோம் என நிறுவனம் சார்பில் எழுத்துபூர்வ உறுதிமொழியை எங்களுக்கு தர வேண்டும். அப்படி தந்தால் அதை ஏற்று ஆய்வு நடத்தி கடை தொடர்ந்து இயங்க அனுமதி தருவோம்.

தற்போது 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரில் அமைந்துள்ள பிற கடைகளிலும் ஆய்வு செய்ய உள்ளோம். புகார் அடிப்படையிலும் , நாங்களாகவும் தன்னிச்சையாகவும் கடைகளில் ஆய்வில் ஈடுபடுகிறோம். நல்ல உணவு மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:வழக்கறிஞரை கம்பி எண்ண வைத்த காதலி

ABOUT THE AUTHOR

...view details