தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி இவர்களுக்கு ரேஷன் கிடையாது?  அரசு விளக்கம் - ரேஷன் பொருள்கள்

ஐந்து ஏக்கர்களுக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரேஷன் பொருள்கள் இல்லை என்று வெளிவரும் செய்திகள் குறித்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

விவசாயி
விவசாயி

By

Published : Oct 13, 2021, 6:50 PM IST

தமிழ்நாடு அரசு, குடும்ப அட்டைதாரர்களுக்கிடையே எவ்வித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் சமூக ஊடகங்கள் சிலவற்றில் ஒன்றிய, மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்துக்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் பொது விநியோகத்திட்ட அரிசி இல்லை என்று எவ்வித முகாந்திரமும் அற்ற பொய்யான தகவல்கள் பரப்பப்படுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து “அனைவரும் பாராட்டும் வண்ணம் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அனைவருக்குமான இந்த பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை” என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், ”தற்போது அரிசி பெற்றுவரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், இலவசஅரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருள்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை அடையலாம்” எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்களில் பரவிவரும் இது குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் ஒரே நாளில் 200 டன் பூக்கள் விற்பனை; விவசாயிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details