தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை' அமைச்சர்  எச்சரிக்கை! - vegetables sold at high prices

சென்னை: ஊரடங்கைப் பயன்படுத்தி, காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

food minister
அமைச்சர் சக்கரபாணி

By

Published : May 23, 2021, 1:02 PM IST

இதுதொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது," தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தவிர்க்க இயலாத இந்த நடவடிக்கையை மக்கள் ஏற்று, ஒத்துழைப்பு தரும் இவ்வேளையில் சில வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் இந்த இக்கட்டான நிலையினை பயன்படுத்தி காய்கறிகளைச் செயற்கையாகக் கூடுதல் விலைக்கு விற்பது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது மக்களைச் சுரண்டும் ஒருசெயல்.

இது குறித்துச் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது அத்தியாவசிய பொருள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் 96.4 விழுக்காடு மக்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகக் காய்கறிகள் விற்பனை செய்வது குறித்து இன்று(மே.23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details