100 நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும் -அமைச்சர் காமராஜ்!
சென்னை: உணவுத் துறை மானியக் கோரிக்கையின் போது புதிய அறிவிப்புகளை உணவு துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.
100 நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும் -அமைச்சர் காமராஜ்!
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் அறிவித்த சில முக்கிய அறிவிப்புகள்..!
- டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் விவசாயிகளின் நலனுக்காக சிமென்ட் கான்கிரீட் தளத்துடன் கூடிய 25 நேரடி நெல் கொள்முதல் நிலைய சொந்த கட்டடங்கள் கட்டப்படும்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இயந்திர கையாளுமை மற்றும் மூட்டை தைத்தல் போன்ற பணிகள் மின்தடையால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க ரூ.8 கோடி மதிப்பீட்டில் மின் ஆக்கிகள் நிறுவப்படும்.
- விவசாயிகளின் பயன்பட்டிற்காக ரூ.13 கோடி மதிப்பீட்டில் 100 நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் தடுக்கும் வகையில் நில எல்லையில் 32 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள் கட்டப்படும்.
- முதியோர் ஓய்வூதிய திட்ட மற்றும் அன்னப்பூர்ணா திட்ட பயனாளிகளுக்கு ரூ.48.51 லட்சம் மதிப்பீட்டில் 4,30,465 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.