சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு இலவசம்! - மாநகராட்சி அறிவிப்பு - சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு இலவசம்
சென்னை: ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் உலகையை அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அடுத்த வேளை உண்ண உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஏழை, எளிய மக்கள் ஊரடங்கு காலத்தில் பசியுடன் இருக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு அம்மா உணவகத்தில் மூன்று வேளைகளிலும் உணவு அளிக்க உத்தரவிட்டது. அதன்படி அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்களும் தன்னார்வாளர்களும் அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருள்களை வழங்குகின்றனர்.
இந்த நிலையில் முதல் முறையாக சேலத்தில் அதிமுக சார்பில் அம்மா உணவகம் மூலம் அனைவருக்கும் இலவசமாக உணவு அளிக்கப்பட்டது. அதேபோல் தற்போது சென்னையில் உள்ள 407 அம்மா உணவகதிலும் ஊரடங்கு முடியும் வரை அனைவருக்கும் முன்று நேரங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அம்மா உணவத்தில் உணவு உன்ன வரும் நபர்களிடம் அவர்களது பெயர், இடம், தொலைபேசி ஆகிய விவரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.