சென்னை:திருவல்லிக்கேணி நடுகுப்பம் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் அஜித் (எ)அஜித்குமார்(24). இவர் உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று பணியை முடித்து விட்டு நடுகுப்பம் 7ஆவது தெருவில் தனது நண்பர்களுடன் அஜித் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவர்கள் வைத்திருந்த கத்தியால் அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனர்.
படுகாயமடைந்த அஜித்தை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஜித் உயிரிழந்தார். இந்தக் கொலை தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கொலை செய்யப்பட்டுள்ள அஜித் மீது ஜாம்பஜார், ராயப்பேட்டை, மெரினா உட்பட பல காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் அஜித் கொலை தொடர்பான எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க:சிறையில் சொகுசு கேட்கும் பப்ஜி மதன்: மனைவியிடம் கையூட்டு கேட்ட அலுவலர் - வைரலாகும் ஆடியோ!