கோயம்பேடு சந்தையில் கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, அச்சந்தையின் காய்கறி விற்பனை திருமழிசைக்கும், பூ, பழங்கள் ஆகியவற்றின் விற்பனை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கும் மாற்றப்பட்டன. அதில் மாதவரம் பழ வியாபாரிகளுக்கு 200 கடைகளை பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில், சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு செயல்பட்டுவரும் 200 கடைகளில் 100 கடைகளை மேல்தளத்திற்கு மாற்ற குலுக்கல் முறையை வளர்ச்சிக் குழுமம் தேர்வுசெய்தது. நேற்று காலை 11 மணியளவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.