தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம்' - அசத்தல் அறிவிப்பு!

சென்னை: திருவல்லிக்கேணியில் உள்ள கடையில் ஒரு கிலோ மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணீர் இலவசம் என்று அக்கடையின் உரிமையாளர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு வாடிக்கையாளர்களிடயே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

flour shop

By

Published : Jul 1, 2019, 5:45 PM IST

Updated : Jul 1, 2019, 8:22 PM IST

சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு திருவல்லிக்கேணியில் இட்லி மாவு கடை நடத்திவரும் குப்தா என்பவர் இட்லி மாவு வாங்க வருவோருக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ஒரு கிலோ இட்லி மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம் என்று அறிவித்தார். இதுதொடர்பான அறிவிப்பை பேனர் மூலம் தனது கடை முன்பு அவர் வைத்துள்ளார். மேலும், அந்த அறிவிப்பில் "ஒரு கிலோ மாவு வாங்கினால் ஒரு குடம் நிலத்தடி நீர் இலவசமாக வழங்கப்படும் என்றும், மாவு வாங்க வரும்போது குடம் கொண்டு வர வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி குடிநீரை வடிகட்டி காய்ச்சிய பிறகு உபயோகப்படுத்தவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த பொதுமக்கள் பலர் இவரது கடைக்கு மாவு வாங்க குடத்துடன் வரத்தொடங்கி உள்ளனர். தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

மாவு வாங்கினால் தண்ணீர் இலவசம்: அசத்தல் அறிவிப்பு!

இது குறித்து மாவு கடை உரிமையாளர் சி.கே.ஆர் குப்தா கூறுகையில், "முப்பது வருடங்களாக மாவுக் கடை வைத்துள்ளேன். முதலில் கூலிக்காக மட்டும் மாவு அரைத்து குடுத்து கொண்டிருந்தோம். அதன் பின் இட்லி மாவை நாங்களே தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். நான் ஐம்பது வருடமாக இங்கு இருக்கிறேன். சென்னையில் இப்படி ஒரு தண்ணீர் பஞ்சத்தை பார்த்ததில்லை. தண்ணீர் பிரச்னையால் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை.

ஏனென்று காரணம் கேட்டபோது குடிநீருக்காக வரிசையில் நின்று தண்ணீர் பிடித்துவிட்டு வருவதால் நேரமாகிறது. நீங்கள்தான் லாரியில் குடிநீர் வாங்குகிறீர்களே எங்களுக்கு ஒரு குடம் கொடுங்கள். நாங்கள் நேரத்திற்கு வருகிறோம் என்று கூறினார்கள். சரியென்று கொடுக்க ஆரம்பித்தேன். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் எங்களுக்கும் இதே போல் குடிநீர் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதன் விளைவே "ஒரு கிலோ தோசை மாவு வாங்கினால் ஒரு குடம் தண்ணீர் இலவசம் " என்ற அறிவிப்பு, என்றார்.

Last Updated : Jul 1, 2019, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details