தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ள பாதிப்பு: ட்ரோன் கேமரா மூலம் காவல் துறையினர் ஆய்வு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் காவல் துறையினர் அதி நவீன ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி ஆய்வுசெய்தனர்.

வெள்ள பாதிப்பு
வெள்ள பாதிப்பு

By

Published : Nov 15, 2021, 7:44 AM IST

சென்னை கடந்த சில நாள்களாகப் பெய்த கன மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்குக்கூட செல்ல முடியாமல் தவித்தனர்.

பல பகுதிகளில் இன்னும் மழை நீர் வடியாத காரணத்தினால் மக்களின் நலன்கருதி சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுடன் சேர்ந்து சென்னை பெருநகர காவல் துறையினர் பணியாற்றிவருகின்றனர்.

ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மடிப்பாக்கம், நாராயணபுரம் ஏரிக்கரை, ராஜேஷ் நகர், பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடு, அம்பேத்கர் நகர், பாலாஜி நகர், பெரும்பாக்கம், பொலினி, எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நவீன ட்ரோன் கேமராக்களை வானில் பறக்கவிட்டு மழை வெள்ளம் தேங்கி இருக்கும் பகுதிகளை ஆய்வுசெய்தனர்.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் வழங்கி காவலர்கள் உதவிசெய்தனர்.

இதையும் படிங்க:அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details