தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோசமான வானிலை: சென்னைக்கு திரும்பிய விமானங்கள்

சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து பெங்களூா் சென்ற இரண்டு விமானங்கள் அங்கு நிலவும் மோசமான வானிலையால், அங்கு தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி வந்தன.

Flights returning to Chennai due to bad weather

By

Published : Dec 22, 2020, 11:41 AM IST

சென்னையிலிருந்து பெங்களூருக்கு இன்று காலை 7.30 மணிக்கு 21 பயணிகளுடன் சென்ற ஏா் இந்தியா விமானம், பெங்களூரில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துள்ளது.

அதேப்போல கொல்கத்தாவிலிருந்து 68 பயணிகளுடன் பெங்களூா் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானமும் அங்கு தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி அனுப்பட்டது. அங்கு வானிலை சீரடைந்த பின்பு இந்த விமானங்கள் பெங்களூா் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து பெங்களூா் சென்ற 2 விமானங்கள் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:மோசமான வானிலை: இண்டிகோ விமானம் சென்னையில் தரையிறக்கம்

ABOUT THE AUTHOR

...view details