தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெங்களூருவில் மோசமான வானிலை... சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்... - in Bengaluru

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மோசமான வானிலை நிலவியதால் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னை திருப்பி விடப்பட்டன.

Flight
Flight

By

Published : May 22, 2023, 7:17 AM IST

Updated : May 22, 2023, 7:32 AM IST

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து 112 பயணிகளுடன் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மாலை 3:10 மணி அளவில் பெங்களூரில் தரை இறங்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் பெங்களூரில் மோசமான வானிலை நிலவியதால், விமானம் அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டது.

அதைப்போல் கொல்கத்தாவில் இருந்து 148 பயணிகளுடன், பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மாலை 3:30 மணிக்கு பெங்களூரில் தரையிறங்க வேண்டும். அந்த விமானம் பெங்களூரில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்கியது. அதேபோல் புனேவிலிருந்து 154 பயணிகளுடன் பெங்களூரில் தரையிறங்க சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பெங்களூரில் தரையிறங்க முடியாமல் சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், மூன்று விமானங்களில் உள்ள பயணிகளும் விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் பயணிகளுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். வானிலை சீரடைந்ததும் இந்த விமானங்கள் அனைத்தும் மீண்டும் பெங்களூரு புறப்பட்டுச் சென்றன. இந்த நேரத்தில் பயனிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகினர்.

இதையும் படிங்க:G20:காஷ்மீர் எல்லையில் ஊடுருவல்; தீவிரவாதியை சுட்டு வீழ்த்திய ராணுவம்

Last Updated : May 22, 2023, 7:32 AM IST

For All Latest Updates

TAGGED:

in Bengaluru

ABOUT THE AUTHOR

...view details