தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்! - Flights delayed due to heavy rain

சென்னை: பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் தாமதமாகின.

Flights delayed at Chennai airport
Flights delayed at Chennai airport

By

Published : Dec 1, 2019, 1:16 PM IST

சென்னையின் புறநகா் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பெய்த பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கபட்டுள்ளன. சென்னையிலிருந்து சிங்கப்பூா், மலேசியா, இலங்கை, துபாய், சாா்ஜா, பக்ரைன், குவைத், தோகா, ஜொ்மன் மற்றும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்பூா், ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 30 விமானங்களும், சென்னைக்கு வரும் விமானங்களான சிங்கப்பூா், கோலாலம்பூா், துபாய், பக்ரைன், சாா்ஜா, பிராங்பாா்ட் மற்றும் பூனே, பெங்களூரு, டெல்லி, மும்பை, விஜயவாடா, கொல்கத்தா உள்ளிட்ட 20க்கும் மேற்பட விமானங்களும் என மொத்தம் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் இரண்டு மணி நேரம்வரை தாமதமாகின.

அதேபோல், பலத்த மழையால் விமான நிலைய ஓடுபாதையில் மழைநீா் குளம்போல் தேங்கியதால் தரையிறங்க வேண்டிய விமானங்கள் தாமதமாகியது. சென்னை நகரின் முக்கிய சாலைகளில் மழைநீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.

சென்னை விமான நிலையம்

இதனால் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், பொறியாளா்கள் உள்ளிட்ட விமான பணியாளா்கள், விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக்கொண்டு பெருமளவு தாமதமாக விமான நிலையத்தை வந்தடைந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, சென்னையிலிருந்து கொழும்பு செல்லவேண்டிய ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் விமானம் 8 மணி நேரம் தாமதமாக இன்று காலை 5 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

இதையும் படிங்க:

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அவசரமாக சென்னையில் தரையிறக்கம்!

ABOUT THE AUTHOR

...view details