தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை-கொல்கத்தா இடையே விமான சேவைகள் ரத்து ஜூலை 19வரை தொடரும் - சென்னை விமானநிலையம்

சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கும், கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கும் இடையே 10 விமானங்களை ரத்து செய்யப்பட்டது ஜூலை 19வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai-aiport
chennai-aiport

By

Published : Jul 6, 2020, 3:38 PM IST

மேற்கு வங்க மாநில அரசு கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்றுவரும் விமானங்களுக்கு தடைவித்துள்ளது. மேலும் அந்தத் தடை ஜூலை 19ஆம் தேதிவரை அமலில் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லவிருந்த 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல கொல்கத்தாவிலிருந்து சென்னை வரவிருந்த 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதனால் சென்னையிலிருந்து செல்லவிருந்த விமானங்களில் முன்பதிவு செய்திருந்த 750 பயணிகளுக்கு ஜூலை 19ஆம் தேதிக்கு மேல் அதைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பணம் திருப்பி அளிக்கப்படவில்லை.

இதையும் படிங்க:தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் விமானம் இயக்க அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details