தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிக்‌ஜாம் புயல் எதிரொலி.. சென்னையில் 3 விமான சேவைகள் ரத்து! - cyclonic storm

chennai airport: மிக்‌ஜாம் புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னையிலிருந்து புறப்படும் 2 விமானங்கள் மற்றும் 1 வருகை விமானம் என மொத்தம் 3 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் 3 விமானங்களின் சேவைகள் ரத்து
சென்னையில் 3 விமானங்களின் சேவைகள் ரத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 4:10 PM IST

சென்னை:'மிக்‌ஜாம் புயல்' அச்சுறுத்தல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச.03) இதுவரையில் 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதாலும், வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்‌ஜாம் புயல் அச்சுறுத்தல் காரணமாகவும், 3 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதோடு, சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் சிங்கப்பூர், துபாய், சார்ஜா, அந்தமான், மும்பை, ஜோத்பூர், ஹைதராபாத் ஆகிய 7 புறப்பாடு விமானங்கள் மற்றும் துபாய், மும்பை ஆகிய 2 வருகை விமானங்கள் என மொத்தம் 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9:40 மணிக்கு மும்பை செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 4:30 மணிக்கு ஹைதராபாத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மற்றும் காலை 8:55 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வர இருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 3 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதைப்போல், சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா, அந்தமான், மும்பை, ஜோத்பூர், ஹைதராபாத் ஆகிய 7 இடங்களுக்கான பயணிகள் விமானங்கள் மற்றும் துபாய், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து வரக்கூடிய 2 விமானங்கள் என மொத்தம் 9 விமானங்கள் ஒரு மணி முதல் 5 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.

மேலும், பல விமானங்கள் தாமதமாக வாய்ப்பு உண்டு என்றும், இதனால் விமான பயணிகள் முன்னதாகவே விமான நிறுவனங்களுக்கு தொடர்பு கொண்டு, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புயல் எதிரொலி: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details