தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அந்தமானில் முன்னறிவிப்பின்றி விமான சேவைகள் ரத்து ; பயணிகள் அவதி - சென்னை விமான நிலையம்

அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதை பராமரிப்பு காரணமாக, விமான சேவைகள் வரும் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அந்தமான் விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி சேவைகள் ரத்து ; பயணிகள் அவதி
அந்தமான் விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி சேவைகள் ரத்து ; பயணிகள் அவதி

By

Published : Dec 14, 2022, 4:54 PM IST

சென்னை:சென்னையில் இருந்து அந்தமானுக்கு செல்லும் ஏழு விமானங்கள் அந்தமானில் இருந்து சென்னை வரும் ஏழு விமானங்கள் மொத்தம் 14 விமானங்கள் வரும் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் விமான நிலையத்தில் ஓடு பாதைகள் பராமரிப்புப் பணி நடப்பதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து 4ஆம் தேதி வரை, 15ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரையும், மீண்டும் 29ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 2ஆம் தேதி வரை, மூன்று முறை 12 நாட்கள் அந்தமான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இப்போது நான்காவது முறையாக முறையாக நேற்று 13ஆம் தேதியிலிருந்து வரும் 16ஆம் தேதி வரையில், நான்கு நாட்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைப் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மீண்டும் விமான சேவைகள் வரும் 17ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று அறிவிக்கின்றனர்.

அந்தமான் விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி சேவைகள் ரத்து ; பயணிகள் அவதி

அந்தமான் விமான சேவைகள் கடந்த ஒன்றரை மாதத்தில் 16 நாட்கள் ரத்தாகி உள்ளன. இது பற்றி பயணிகளுக்கு முன்னதாகவே முறையான அறிவிப்பு செய்யப்படாமல் திடீரென இதுபோல் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அந்தமான் விமான நிலையத்தில் ஓடுபாதைப் பராமரிப்பு பணிகள் எப்போது முடிவடையும்? இனிமேலும் எத்தனை முறை இதை போல் ரத்து செய்யப்படும்? என்பதை இந்திய விமானநிலைய ஆணையம் பயணிகளுக்கு முறைப்படி முன்னதாகவே அறிவித்து விட்டால் பயணிகள் அதற்கு தகுந்தார்போல் தங்களுடைய பயணத் திட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்வார்கள் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கடலூர் சிறையில் கைதிகளுக்கு துன்புறுத்தல்; சவுக்கு சங்கர் உயர் நீதிமன்றத்தில் மனு

ABOUT THE AUTHOR

...view details