தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இறக்கையில் பழுது, நடுவானில் வட்டம், 123 பேர் உயிர்' - பரபரப்பான சென்னை விமான நிலையம்! - Emergency land

சென்னை: டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட திடீா் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிது நேரம் வானத்தில் வட்டமடித்த விமானம், பின்பு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

flight-emergency-landing

By

Published : Oct 9, 2019, 11:45 PM IST

சென்னைக்கு டெல்லியிலிருந்து விமானம் ஒன்று 117 பயணிகள், 6 ஊழியர்கள் என மொத்தம் 123 பேருடன் வந்தது. சென்னையில் தரையிறங்கத் தயாரான போது விமானத்தின் சக்கரங்கள் திடீரென தொழில்நுட்பக் கோளாறால் இயங்கவில்லை.

இதுகுறித்து உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் வானில் தொடா்ந்து வட்டமடித்தது. இதன் பின்னர் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன.

இதையடுத்து விமானம் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 123 பேரும் உயிா் தப்பினா்.

சென்னை விமான நிலையம்
டெல்லியில் இருந்து வந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டுச் செல்லும். ஆனால் விமானத்தின் இறக்கையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்தபின் சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் இறக்கைப் பகுதியில் பழுது ஏற்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 2024 தேர்தலுக்கு முன் குடியுரிமை பெறாத மக்கள் வெளியேற்றப்படுவர் - அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details