தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்கள் கைது - காவல் துறை விசாரணை! - தமிழ் குற்ற செய்திகள்

சென்னை: புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 42 சவரன் நகை, 55 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Five youth arrested in connection with serial robbery - Police investigation
Five youth arrested in connection with serial robbery - Police investigation

By

Published : Jul 3, 2020, 9:00 PM IST

சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியிலுள்ள அமர் நகர் மற்றும் பெருங்களத்தூர் பகுதியான பாரதிநகர், கண்ணன் அவென்யூ, சேலையூர், மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, பூட்டியிருந்த வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

மேலும் இது தொடர்பாக புறநகர் பகுதியிலுள்ள காவல் நிலையங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருந்துள்ளது. இந்நிலையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன் அவர்களின் உத்தரவின்பேரில், சேலையூர் உதவி ஆணையர் சகாதேவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை கைப்பற்றி தனிப்படை காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததையடுத்து. அப்பகுதியைச் சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று பதுங்கியிருந்து கைது செய்தனர்.

இதையடுத்து செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த குகன்(21), பரூக்(22), பிரகாஷ்(20), சூர்யா, விக்ரம்(19) ஆகிய ஐந்து பேரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இவர்கள் 5 பேரும் புறநகர் பகுதியில் இருக்கும் வீடுகளில், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

இவர்கள் 5 பேரும் ஏற்கனவே புறநகர் பகுதிகளில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 42 சவரன் தங்க நகை, 5 விலை உயர்ந்த லேப்டாப்கள், 55 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 2 கிலோ வெள்ளி பொருள்கள், 4 விலை உயர்ந்த வாட்ச்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்திய காவல் துறையினர், ஐந்து பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details