காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயராமன். அவரது சொத்திற்கு ஆசைப்பட்ட இரண்டாவது மனைவியின் மகன் விக்னேஷ், கூலிப்படையை வைத்து ஜெயராமனை கொலை செய்தார். இதில் முக்கிய குற்றவாளியான விக்னேஷ் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு சொகுசு கார்களில் ஜெயராமனை கொலை செய்துவிட்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார், முத்துக்குமார், அஸ்வின், வெங்கட், விக்கி ஆகிய ஐந்து பேர் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.