தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாட்டரி சீட்டுகள் விற்ற ஐந்து பேர் கைது! - தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு

சென்னை: பூவிருந்தவல்லி அருகே தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

லாட்டரி சீட்டுகள் விற்ற ஐந்து பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற ஐந்து பேர் கைது

By

Published : Nov 4, 2020, 8:48 PM IST

சென்னை பூவிருந்தவல்லி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட, ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்கப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குற்றத்தடுப்பு தனிப்படை காவல் துறையினர், அப்பகுதிகளைத் தீவிரமாக கண்காணித்துவந்தனர்.

இந்நிலையில், பூவிருந்தவல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் ஒரு கட்டடத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, குற்றத்தடுப்பு நுண்ணறிவு காவல் துறையினர் அங்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தபோது தடைசெய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பாலாஜி, குசேலன், விஜயகுமார், கோபிநாத், வேல்குமார் ஆகிய ஐந்து பேரை குற்றத்தடுப்பு நுண்ணறிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய், லாட்டரி சீட்டு எழுதும் துண்டுச் சீட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து பூவிருந்தவல்லி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, லாட்டரி சீட்டு விற்ற ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்த பூவிருந்தவல்லி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:’மீட்பு விமானத்தில் கடத்தப்பட்ட குங்குமப்பூ’

ABOUT THE AUTHOR

...view details