தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அலுவலர்கள் டிஜிபியாக பதவி உயர்வு! - சென்னை அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அலுவலர்களுக்கு, காவல்துறை தலைவர்களாக பதவி உயர்வு அளித்து உள்துறைச் செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காவல் துறை தலைவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/24-September-2021/13163916_ips1.jpg
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/24-September-2021/13163916_ips1.jpg

By

Published : Sep 25, 2021, 9:22 AM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிவரும் ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 1990 ஆம் ஆண்டு பிரிவில் தேர்வாகி, தமிழ்நாட்டில் பணியாற்றும் 5 ஐபிஎஸ் அலுவலர்களை காவல்துறை தலைவர்களாக பதவி உயர்த்தி, உள்துறைச் செயலாளர் பிரபாகரன் இன்று (செப்.20) உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே 7 காவல்துறை தலைவர்கள் உள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பதவி உயர்வு அறிவிப்பால் இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

உள்துறை செயலாளர் வெளியிட்ட பதவி உயர்வு அறிவிப்பாணை

அதன்படி பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு:

1. சங்கர் ஜிவால்

2. ஏ.கே விஸ்வநாதன்

3. ஆபாஷ்குமார்

4. டி.வி ரவிச்சந்திரன்

5. சீமா அகர்வால்

செப்டம்பர் 22ஆம் தேதி பதவி உயர்வு அளிப்பதற்கான சிறப்பு ஆலோசனைக்குழு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னரே ஏப்ரல் 9 ஆம் தேதி பதவி உயர்வு குறித்து மத்திய உள்துறையிடம், தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி உயர்வால், முக்கிய காவல்துறை உயர் அலுவலர்களின் பணியிடங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details