தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் இருந்து டெல்லி, கொச்சி செல்லும் விமானங்கள் ரத்து! - Flight service cancelled

போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், சென்னையிலிருந்து புறப்படவிருந்த 3 விமானங்கள் உள்பட 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் ஐந்து விமானங்கள் ரத்து
சென்னையில் ஐந்து விமானங்கள் ரத்து

By

Published : Nov 30, 2020, 10:59 AM IST

சென்னை:போதிய பயணிகள் இல்லாத காரணத்தால்,சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று (நவம்பர் 30) டெல்லி, கொச்சி செல்லவிருந்த ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து இன்று காலை 6.55 மணிக்கு டெல்லி செல்லவிருந்த விமானம், காலை 7 மணிக்கு அகமதாபாத் புறப்படவிருந்த விமானம், காலை 8.45 மணிக்கு கொச்சி செல்லவிருந்த விமானம் ஆகியவை போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, இது தொடர்பாக முன்பதிவு செய்திருந்த ஒரு சில பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களது டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டன.

அதேபோல் அகமதாபாத்திலிருந்து இன்று பகல் 12.15 மணிக்கு சென்னை வரும் விமானம், கொச்சியிலிருந்து பகல் 12.15 மணிக்கு சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டன. இன்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 5 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:டெல்லி - பெங்களூரு: விமானத்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்...!

ABOUT THE AUTHOR

...view details