தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாழ்வாக தொங்கிய மின் வயரில் சிக்கி ஐந்து மாடுகள் உயிரிழப்பு!

சென்னை: அவடி அருகே தாழ்வாக தொங்கிய மின் வயரில் சிக்கி 5 மாடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடுகள் உயிரிழப்பு
மாடுகள் உயிரிழப்பு

By

Published : Nov 9, 2020, 11:34 PM IST

சென்னை மாவட்டம் ஆவடி அருகே பாலவேடு காலனி பகுதியில் வயல்வெளி உள்ளது. அங்கு மின்சார வயர் சவுக்கு மரத்தின் மூலமாக எடுத்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பலமுறை உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (நவ.09) பாலவேடு கிராமத்தில் உள்ள பசு மாடுகள் மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு சென்றுள்ளன. அப்போது, அங்கு தாழ்வாக தொங்கிய மின் வயரில் 5 மாடுகள் சிக்கி, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. பிறகு தகவலறிந்து, மாட்டின் உரிமையாளர்களான ஆவடி, பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த மதுரை (75), கோவிந்தசாமி (44), மகேஸ்வரன் (23) ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாடுகளை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த பசு மாடுகளை உடற் கூறாய்வுக்கு பின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கிராம மக்கள் கூறுகையில், ”வயல்வெளியில் தாழ்வாக தொங்கிய மின்சார வயரை சரி செய்ய பலமுறை புகார் அளித்தும், மின்வாரிய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக” குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:உயர்நிலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details