தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்விரோதமாக காரணமாக இளைஞர் கொலை: 5 பேர் கைது கைது! - முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை

சென்னை: பழைய பெருங்களத்தூரில் முன்விரோதமாக காரணமாக கார் ஓட்டுநரை கொலை செய்ததாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்விரோதமாக காரணமாக இளைஞர் கொலை: 5 பேர் கைது கைது!
முன்விரோதமாக காரணமாக இளைஞர் கொலை: 5 பேர் கைது கைது!

By

Published : Jun 1, 2021, 8:37 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர், கால் டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முந்தினம் (மே 30) இரவு விக்னேஷ் தனது நண்பரை பார்த்து விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக உருட்டுக்கட்டை, கத்தி, போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பியோடினர்.

உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை் பெற்றுவந்த அவர் இன்று (ஜூன் 1) உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பீர்க்கங்காரணை காவல் துறையினர், 11 பேர் தனி குழு கொண்ட தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெருங்களத்தூரை சேர்ந்த மணிகண்டன் (25), அஜித் (24) பீர்கன்காரனையை சேர்ந்த சூர்யா (26), மப்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (27), மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது.

முன்விரோதமாக காரணமாக இளைஞர் கொலை: 5 பேர் கைது கைது!

மேலும், முன்விரோதம் காரணமாக விக்னேஷை கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details