தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 3 தமிழ்நாடு மீனவர்கள் தாய்த்தமிழ்நாடு திரும்பினர் - ராமேஷ்வரம் மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட,ராமநாதபுரத்தைச் சோ்ந்த 3 மீனவா்கள் விடுதலை செய்யப்பட்டு, இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 3 மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 3 மீனவர்கள் விடுதலை

By

Published : Jan 28, 2022, 6:11 PM IST

சென்னை:ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்தவர்கள் கிலாட்சன் (29), மரிய எமா்ஸன் (28) கிரின்ஸ் (32) மீனவா்களான இவர்கள் 3 பேரும் கடந்த டிச.9 அன்று மண்டபம் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலுக்காக இயந்திரப் படகில் கடலுக்கு சென்றனா்.

நள்ளிரவில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனா். அப்போது இலங்கை கடற்படையினர் வந்து, மீனவா்களின் படகைச் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

மீனவர்வர்களைக் கைது செய்த இலங்கை கடற்படை

அத்தோடு 3 மீனவா்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனா். படகு மற்றும் பிடித்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனா்.
அதன்பின்பு 3 மீனவா்களையும் இலங்கைக்குக் கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சா், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மூலமாக தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தாா்.

இந்நிலையில், இம்மாதம் டிச.5அன்று இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டு மீனவா்கள் 3 பேரையும் விடுதலை செய்தது. அத்தோடு இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனா்.

தூதரக அலுவலர்கள், இவர்கள் 3 பேருக்கும் கரோனா தொற்றுப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை செய்தனா். மேலும் அவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனா்.

தாயகம் திரும்பிய மீனவர்கள்

அதன்பின்பு 3 மீனவா்களையும் விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா்.

மேலும் இவா்களுக்கு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் இந்தியத் தூதரக அலுவலர்கள், எமா்ஜென்சி சா்டிபிகேட்கள் வழங்கினா்.

அதன்மூலம்,3 மீனவா்களும் இலங்கையிலிருந்து ஏா் இந்தியா சிறப்புப் பயணிகள் விமானத்தில் இன்று சென்னை சா்வதேச விமான நிலையம் வந்து சோ்ந்தனா்.

சென்னை விமான நிலையத்திலும் 3 மீனவா்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனைகள் நடந்தன.

அதன்பின்பு மீனவா்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தனா். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அலுவலர்கள் மீனவா்களை வரவேற்றனா்.

அதன்பின்பு மீன்வளத்துறை ஏற்பாடு செய்திருந்த காா் மூலம் சொந்த ஊரான மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதையும் படிங்க:கிண்டியில் வேளாண்மைத்துறை பூங்கா - பணிகளை முடிக்க தமிழ்நாடு அரசு திட்டம்

ABOUT THE AUTHOR

...view details