சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்புச் சார்பில், ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவைக் கண்டித்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் இன்று (ஜூலை 19) கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் கோ.சு. மணி, "மீனவ மக்களுக்காக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மசோதா ஒரு கறுப்புச் சட்டம். இது தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மீனவ மக்களுக்கு எதிராகவும் உள்ளது.
இணை அமைச்சர் எல். முருகனுக்கு கோரிக்கை