தூத்துக்குடி: தாளமுத்துநகர் சமீர்விகாஸ் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (31). கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் தனது ஓய்வு நேரங்களில் டீசல் திருடும் வேலையை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன்படி சிப்காட் காட்டுப்பகுதியில் நேற்றிரவு (ஜன.12) டீசல் திருடுவதற்காக அலெக்ஸ் கேன்களை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது ஒன்றாக மது அருந்தும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உடனிருந்தவர்கள் அலெக்ஸை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.