வங்கக் கடலில் கோடியக்கரைக்கு அருகே தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், காரைக்காலை சேர்ந்த 3 பேர் என மொத்தம் பத்து பேர் தங்களது விசைப்படகில் நேற்று முன்தினம் (அக். 20) இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎன்எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்பு பணியிலிருந்த இந்திய கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் மயிலாடுதுறையை அடுத்த வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்தது. அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.