தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காசிமேட்டில் மீன் விலை குறைவு - சென்னை மாவட்ட செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விலை குறைவால் பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வாங்க குவிந்தனர்.

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

By

Published : Sep 5, 2021, 3:52 PM IST

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் மீன் பிடிக்கப்படுகிறது. இன்று (செப்.5) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர்.

கரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் காவல் துறையினர் அறிவித்தனர். மீன் வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்தது.

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு மீன்களை வாங்கிச் சென்றனர். சிறிய ரக வஞ்சிரம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பெரிய ரக வஞ்சிரம் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. சங்கரா மீன் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிழங்கா மீன் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இறால் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மீன்கள் விற்பனை செய்யும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:5 நாள்களுக்கு மழை எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details