தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நிலைகொண்டுள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி நிற்கிறது. குறிப்பாக, சென்னையில் தொற்று வீரியமடைந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் எம்எல்ஏ! - அன்பழகனுக்கு கரோனா
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டு வந்தது. ஆனால், தற்போது திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு தொற்று ஏற்ட்டுள்ளதன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களிடம் கரோனா தன் கணக்கைத் தொடங்கியுள்ளது.
தற்போது அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற எம்எல்ஏக்கள் பதற்றத்தில் உள்ளனர்.