தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம்’ - அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு

சென்னை: முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Mar 27, 2021, 3:31 PM IST

சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை பெருநகர காவல் துறையில் சிபிசிஐடி, சைபர் குற்றப் பிரிவில் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. ஆகையால் அவற்றைப் பதிவுசெய்ய உத்தரவிட வேண்டும் என வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் தகவல் அறிக்கைகளை காவல் துறை அல்லது அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ”முதல் தகவல் அறிக்கைகளை இணைய தளங்களில் வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல்செய்ய வேண்டும். இதுவரை அமல்படுத்தாவிட்டால் உடனடியாக அதை அமல்படுத்த வேண்டும்” எனக் கூறி வழக்கை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க :நடந்தது சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு.. ஆகையால்... தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details