கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அதையடுத்து மத்திய அரசு மே 25ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் நிபந்தனைகளுடன் தொடங்கலாமென அறிவித்தது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், விமான சேவைகளை தொடங்க கூடாது எனத் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால் பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளுடன் தமிழ்நாட்டில் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் மதுரைக்கு புறப்பட இருந்தது. ஆனால், அந்த விமானம் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. அதனால் முதல் விமானமாக இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 6.35 மணிக்கு புறப்பட்டது.