தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மேயராக பதவியேற்றார் பிரியா...! - பிரியா

சென்னை மாநகராட்சியில் முதல் பட்டியலின பெண் மேயராக பிரியா பதவியேற்றார்.

first dalit woman take charge of chennai corporation  first dalit woman in chennai corporation  chennai corporation  mayor election  chennai mayor  chennai mayor priya  சென்னை மேயராக பதவியேற்றார் பிரியா  மேயராக பதவியேற்றார் பிரியா  பிரியா  சென்னை மேயர்
சென்னை மேயராக பதவியேற்றார் பிரியா

By

Published : Mar 4, 2022, 10:37 AM IST

Updated : Mar 4, 2022, 10:56 AM IST

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களில் வெற்றிபெற்றது. இந்நிலையில் திமுக சார்பில் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் சென்னை மாநகராட்சிக்கு மேயர் வேட்பாளராக, 74 ஆவது வார்டில் வெற்றி பெற்ற பிரியா ராஜன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் அவர் தவிர வேறு யாரும் போட்டியிடாததால், பிரியா ராஜன் சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை மேயராக பதவியேற்றார் பிரியா

சுமார் 340 ஆண்டுகள் பழமையான சென்னை மாநகராட்சியில், முதல் தலித் பெண்ணாக 28 வயதான பிரியா ராஜன், இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: வடசென்னை To ரிப்பன் பில்டிங்; சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் வேட்பாளர்!

Last Updated : Mar 4, 2022, 10:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details