சென்னை சைதாப்பேட்டை ஜீனஸ் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கீதா(69). இவர் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் பண்டிகையின் தொடர்ச்சியாக, வீட்டில் தீப விளக்கை ஏற்றி உள்ளார். அப்போது திடீரென்று நெருப்பானது கீதாவின் புடவையில் பற்றி எரியத் தொடங்கியது.
இதனைக் கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து, பின்னர் ஆம்புலன்சிற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள், கீதாவை சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸில் ஏற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.