சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணகுமார். இவர் திருவொற்றியூர் அடுத்த சடையும்குப்பம் பகுதியில் பழைய இரும்பு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பழைய இரும்பு குடோனில் தீவிபத்து: பல மணிநேரம் போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள் - Thiruvothiyur fire
சென்னை: திருவொற்றியூரில் தனியாருக்குச் சொந்தமான பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை பலமணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
fire
தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியதால் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஊழியர்கள் யாரும் வேலைக்கு வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.