தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை மாநகர அரசு பேருந்தில் தீ விபத்து! - 21 ஜி குளிர்சாதன மாநகர அரசு பேருந்து

தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் பயணிகளுடன் வந்து சென்றுக்கொண்ருந்த ஏசி பேருந்தின் மேர்கூரையில் திடீரென பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharatதாம்பரத்தில் அரசு ஏசி பேருந்தின் மேற்கூரையில் தீ பிடித்ததால் பரபரப்பு
Etv Bharatதாம்பரத்தில் அரசு ஏசி பேருந்தின் மேற்கூரையில் தீ பிடித்ததால் பரபரப்பு

By

Published : Nov 24, 2022, 6:30 PM IST

சென்னை:பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் எண் 21 G குளிர்சாதன மாநகர அரசு பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது பேருந்து மேல் கூரையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரத்தில் அரசு ஏசி பேருந்தின் மேற்கூரையில் தீ பிடித்ததால் பரபரப்பு

இதனிடையே, பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தாம்பரம் - ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர், பேருந்தில் தீ அணைக்கப்பட்ட பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க:ரூ.16 லட்சம் US டாலர், தங்கம், வைரம் அபேஸ்.. சென்னை பகீர் சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details