சென்னை:சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் விநாயக நகர் 13ஆவது தெருவில் வசித்து வருபவர் டேவிட்(59). இவர் அதே பகுதியில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கடையை முழுவதுமாக காலி செய்துவிட்டு பொருள்கள் அனைத்தையும் அவரது வீட்டின் மாடியிலுள்ள அறை ஒன்றில் வைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 16) அந்த அறையில் இருந்து புகை வருவதை கண்ட அப்பகுதியினர் டேவிட்டிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர் மேலே சென்று பார்க்கையில் தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.