தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம் இயந்திரம் தீ விபத்தால் சேதம் - Money escaped in Chennai ATM fire

சென்னை: அம்பத்தூர் எடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏடிஎம் இயந்திரம் சேதமடைந்தது.

ஏடிஎம் இயந்திரம் தீ விபத்தால் சேதம்
ஏடிஎம் இயந்திரம் தீ விபத்தால் சேதம்

By

Published : Feb 14, 2020, 9:54 AM IST

சென்னை அம்பத்தூர் சி.டி.ஹெச். சாலையில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

ஏடிஎம் இயந்திரம் தீ விபத்தால் சேதம்

நல்வாய்ப்பாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான பணம் சேதமடையவில்லை என்றாலும் ஏடிஎம் இயந்திரம் சேதமடைந்தது. இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தின் மேற்பகுதியில் சந்தேகத்திற்குரிய பொருள்

ABOUT THE AUTHOR

...view details