ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தொடக்கத்தில் மெதுவாக பரவிய தீ பின்பு, காற்றின் வேகம் அதிகரிக்க கொழுந்து விட்டு எரிந்தது.
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில் தீ விபத்து - சத்தியமங்கலத்தில் குப்பை கிடங்கில் தீ விபத்து
ஈரோடு : நகராட்சி பணியாளர்களின் அலட்சியத்தால், புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
![புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில் தீ விபத்து புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை வளாகத்தில் தீ விபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11082245-201-11082245-1616215030930.jpg)
இதனால் அப்பகுதியில் புகை சூழந்ததால் பொதுமக்களுக்கு மூச்சுத் தினறல் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் தீயணப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனால் பெரிய அளவிலான சேதாரம் ஏற்படவில்லை. இந்த தீ விபத்திற்கு நகராட்சி பணியாளர்களின் அலட்சிப்போக்கை காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். காலி இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்துவிட்டு குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு அவற்றை கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.