சென்னை பல்லாவரம் கண்ணபிரான் கோயில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மின்னணு பழுதுபார்க்கும் கடை செயல்பட்டுவருகிறது. ஊரடங்கு காரணமாக கடை மூடப்படுள்ளது.
இந்த நிலையில் நேற்று பூட்டியிருந்த கடையிலிருந்து புகை வந்துள்ளது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது கடையில் உள்ள பொருள்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன. அதனால் அவர்கள் கடையின் உரிமையாளருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.