சென்னை:பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான தோல் மற்றும் கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று (ஆகஸ்ட்.27) காலை தொழிற்சாலையில் தோல் பொருள்கள், தொழிற்சாலையின் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதையடுத்து தொழிற்சாலையில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் தீ மளமளவென எரியத் தொடங்கியது. பின்னர் தாம்பரம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.