தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் அருகே திடீர் தீ விபத்து - Iron shop fire accident

தாம்பரம் அருகே இயங்கிவரும் பழைய இரும்புக் கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இரும்பு கடையில் தீ விபத்து  தாம்பரம் இரும்பு கடை தீ விபத்து  தீ விபத்து  விபத்து  தீ காயம்  இரும்பு  இரும்பு கடை  பழைய இரும்பு கடை  சென்னை செய்திகள்  chennai news  chennai latest news  fire accident  Iron shop fire  Iron shop  tambaram Iron shop fire  Iron shop fire accident  fire accident in iron shop near tambaram
தீ விபத்து...

By

Published : Sep 4, 2021, 7:09 AM IST

சென்னை:தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா செல்லும் சாலையில் பழைய இரும்புக்கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் நேற்று (செப்டம்பர் 3) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட கடையின் உரிமையாளர் கடையிலிருந்து வெளியே வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால் தீ மளமளவெனப் பரவி கடை முழுவதும் எரிய தொடங்கியது.

இரும்புக் கடையில் தீ விபத்து

3 பேருக்கு தீக்காயம்

இதனால் செய்வது அறியாமல் கடையின் உரிமையாளர் தாம்பரம் சானடோரியம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர், சுமார் மூன்று மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.

இத்தீ விபத்தில் இரும்பு குடோனிலிருந்த மூவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்தில், இரும்புக் கடையிலிருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமடைந்துள்ளது. இது குறித்து தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: தந்தையை கொன்ற வீடியோ கேம்; பாசக்கார மகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details