தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீயில் உருகிய வெள்ளிக்கட்டிகள்! : சென்னை வணிக நிறுவனத்தில் தீவிபத்து - தீ விபத்து செய்திகள்

சென்னை மின்ட் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் 1 கோடி மதிப்பிலான வெள்ளி பாத்திரங்கள், துணிகள் மற்றும் 8 லட்ச ரூபாய் பணம் எரிந்து நாசமானது.

சென்னை மின்ட் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் தீ விபத்து: 1 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்
சென்னை மின்ட் தெருவில் உள்ள காம்ப்ளக்ஸில் தீ விபத்து: 1 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

By

Published : Jun 12, 2023, 2:26 PM IST

சென்னை:சென்னை மின்ட் தெருவில் ரத்தன்ராஜ் ஸ்கொயர் என்ற பெயரில் இரண்டு அடுக்கு கொண்ட காம்பளக்ஸ் செயல்பட்டு வருகிறது. இன்று (ஜூன் 12) அதிகாலை 3.30 மணி அளவில் அக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நவீன தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் சுமார் 1 கோடிக்கும் மேல் மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமானது.

இந்த காம்பளக்ஸில் துணிக்கடை, வெள்ளி பாத்திரக்கடை, எலக்ட்ரிக்கல் கடை என 11 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த வளாகத்திலிருந்து அதிகப்படியான கரும்புகை வந்த நிலையில் அருகிலிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள்ளாக கடையில் தீயானது கட்டிடம் முழுவதும் பரவி மளமளவென எரிய தொடங்கி உள்ளது.

தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை, யானைக்கவுனி, எழும்பூர், எஸ்பிளனேடு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலிருந்து 10 தீயணைப்பு வாகனங்களில் 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்டிடம் முழுவதுமாக தீயானது பரவியதால் தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:எனது தன்மானத்தை காப்பாற்றியவர் சுந்தர்‌.சி - இயக்குனர் பேரரசு உருக்கம்!

சுமார் 4 மணி போரட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள், வெள்ளிப் பாத்திரங்கள் தீயில் கருகி நாசமாயின. பின்னர் இந்த தீவிபத்து தொடர்பாக யானைகவுனி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது டிரான்ஸ்பார்மர் எரிந்து கடைக்குள் தீ பரவி விபத்து ஏற்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான கடையில் வைத்திருந்த பொருட்கள் மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம், வெள்ளி கட்டிகள் கருகி நாசமாயின என யானைகவுனி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அதிகாலை என்பதால் எந்த உயிர் இழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கால்நடை மருத்துவப்படிப்பில் சேர வேண்டுமா? இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details