தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வர்த்தக மையம் எதிரே காரில் ஏற்பட்ட தீ விபத்து! - Nanthambakkam Trade Centre

சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே திடீரென கார் தீ பிடித்து எரிந்ததால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

fire-accident-in-car-near-nanthambakkam-trade-centre
fire-accident-in-car-near-nanthambakkam-trade-centre

By

Published : Dec 4, 2019, 9:29 AM IST

அம்பத்தூரைச் சேர்ந்த ராஜ்கமல் (46) என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு தன் மனைவியோடு வீட்டிற்கு திரும்பினார். நந்தம்பாக்கம் வர்த்தக மையம் வாசல் முன்பு காரில் சென்றபோது, அவரது காரில் இருந்து புகை கிளம்பியது. இதையடுத்து உடனடியாக சுதாரித்த அவரும் அவரது மனைவியும் கீழே இறங்கினார். அதற்குள் கார் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.

வர்த்தக மையம் எதிரே காரில் ஏற்பட்ட தீ விபத்து

சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த எதிர்பாராத தீ விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: விபத்தில் கை முறிந்தவருக்கு ரூ. 26.85 லட்சம் இழப்பீடு MTC-க்கு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details