சென்னை கோயம்பேட்டில் 2019ஆம் ஆண்டு ஜாய் டிராவல்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்தில் தீ விபத்தில் ஏற்பட்டது. அதேபோல இன்றும் ஜாய் டிராவல்ஸ் நிறுவனத்தின் பேருந்துகள் சர்வீஸ் செய்வதற்காக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து! - கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம்
சென்னை : கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து
அந்தப் பேருந்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாகத் தீயை அணைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:திருவள்ளூர் பர்னிச்சர் கம்பெனியில் தீ விபத்து : ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்