தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காசிமேட்டில் பைபர் படகு மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்! - Fishermen strike

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை பைபர் படகு மீன்பிடி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசிமேட்டில் பைபர் படகு மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
காசிமேட்டில் பைபர் படகு மீன்பிடி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

By

Published : Sep 9, 2020, 3:01 PM IST

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பைபர் படகுகளை நிறுத்தி வைக்கக் கூடிய இடத்தை மீன்பிடித் துறை உதவி இயக்குனர் திடீரென காலி செய்து தர வேண்டும் என்று கூறியதால் அதனை எதிர்த்து மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பைபர் படகுகளை நிறுத்தக்கூடிய இடம் பார்சல் சேவைகளுக்காக மாற்றப்படுவதாக மீன்பிடித்துறை உதவி இயக்குனர் தெரிவித்ததார். மீனவர்கள் பல ஆண்டுகளாக அந்த இடத்தில் பைபர் படகுகளை கட்டி வைப்பதாகவும் பைபர் படகுகளை பழுதுபார்க்கும் இடமாக அதனைப் பயன்படுத்தி வருவதாகவும் தற்பொழுது உடனடியாக அந்த இடத்தை காலி செய்து அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பார்சல் சேவைகளுக்கு புதிதாக கட்டப்பட்ட வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ளுமாறும் மீனவர்களின் படகுகளை நிறுத்தக்கூடிய இடத்தை மாற்ற முடியாது என்று கூறி சென்னை பைபர் படகு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக இன்று (செப்.9) ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details