சென்னை:மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டடம், இடிபாடு கழிவுகளை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு ஏதுவாக கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களில் தலா 400 மெட்ரிக் டன் திறன் கொண்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மறுபயன்பாட்டு மையங்கள் பொதுமக்கள் தங்களால் குறைந்த அளவில் உருவாக்கப்படும் கட்டடக் கழிவுகளை கொட்டுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் சார்பில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர பொது இடங்களில் கழிவுகளை கொட்டுனால், அவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016, துணை விதிகள் 2018ன் படி ரூ.2000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வசதிகள்