கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் இருக்கும் நபர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200, தகுந்த இடைவெளி பின்பற்றாதவர்களிடம் ரூ. 500 என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை கடந்த 8ஆம் தேதி முதல், முகக்கவசம் அணியாத 1,30,531 பேரிடம் இருந்து 2 கோடியே 52 லட்சத்து 34 ஆயிரத்து 900 ரூபாய் பணம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனிமனித இடைவெளியை பின்பற்றாத 6,465 பேரிடம் 26 லட்சம் ரூபாய் பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம்